» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.11ல் துவக்கம்

வியாழன் 14, மார்ச் 2024 11:12:51 AM (IST)

"மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.11-ல் துவங்குகிறது. ஏப்.22ல் தேரோட்டம் நடக்கிறது. 

இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஏப்.11 ல் மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. ஏப். 12 காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். ஏப்.13 முதல் 18 வரை தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

ஏப்.18 அன்று இரவு 7:35 க்கு மேல் 7:59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடைபெறும். ஏப். 20 மாலை 6:30 இரவு 11:30 வரை திக்கு விஜயம் நடைபெறும். முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.21 காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் நடைபெறும். அன்று மாலை பூப்பல்லக்கில் மீனாட்சி - சொக்கநாதர் நான்கு மாசி வீதிகளிலும் வீதிஉலா வருவர்.

ஏப்.22 காலை 6:05 முதல் 6:45 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். ஏப். 23 மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவுபெறும். ஏப். 22 அன்று தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்.,23 ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவும் நடைபெறும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory