» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் குழந்தை கடத்தல் தொடர்பாக போஸ்டர்கள்: 2 வாலிபர்கள் கைது

வியாழன் 14, மார்ச் 2024 10:36:12 AM (IST)

நெல்லையில் பொதுமக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் குழந்தை கடத்தல் தொடர்பாக போஸ்டர் ஒட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றன. இதுபோன்ற வதந்திகள் பரப்புபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக போலீசார் எச்சரிக்கை விடுத்தது போன்ற போஸ்டர்கள் நெல்லையில் சில இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் இந்த போஸ்டர்கள் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக நினைத்து அச்சம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி சிலம்பரசன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். 

அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம் பற்பநாதபுரத்தை சேர்ந்த கோவில்பிள்ளை மகன் இமானுவேல் அந்தோணி (29), கே.டி.சி. நகர் அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிவந்திபட்டி போலீசார் அவர்கள் மீது பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி சிலம்பரசன் கூறுகையில், "குழந்தை கடத்தல் தொடர்பாக போலீசார் சார்பில் எந்த ஒரு போஸ்டரும் ஒட்டப்படவில்லை. இதனை பார்த்து பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இதுபோன்ற வதந்திகளை பரப்பவும் வேண்டாம். வதந்திகளை பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory