» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை: மன்சூர் அலிகான் அறிக்கை

புதன் 13, மார்ச் 2024 5:08:12 PM (IST)

அதிமுக உடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை தலைவர் மன்சூரலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது, தலைமை நிலையச் செயலாளர் சீலன் பிரபாகரன், துணைப் பொதுச்செயலாளர் வல்லரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் சென்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஆயினும் இன்னும் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம்.நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று மன்சூரலிகான் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

DOUBLE LEAFMar 14, 2024 - 03:13:49 PM | Posted IP 162.1*****

கோமாளி சைமன் கூட சேரலாமே ... இருவரும் உளறுவது பொருத்தமாக இருக்கும்

tamilanMar 13, 2024 - 08:01:18 PM | Posted IP 172.7*****

இவருடன் பேச்சு வார்த்தை நடத்துகிற அளவிற்கு அ.தி .மு .க . போய்விட்டதா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory