» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!

புதன் 13, மார்ச் 2024 4:33:05 PM (IST)



பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்கிராமம் (ரெட்டியார்பட்டி மழை அடிவாரத்தில்) பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.09.2021 அன்று விதி 110-ன் கீழ் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை, உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக திருநெல்வேலி நகரில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து ஆணை வெளியிட்டார்கள். திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம் கிராமம் (ரெட்டியார்பட்டி மழை அடிவாரத்தில்) 13.02 ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைக்க ரூ 13.02 கோடியினை வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தும், ரூ 18.00 கோடி மாநில உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியிலிருந்தும் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. 

அருங்காட்சியகத்தின் கட்டடத் தொகுதிகளின் வடிவமைப்பு இப்பகுதி மக்களின் கலாச்சார வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் உள்@ர் வீடுகளின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாக முற்றங்கள் தாழ்வாரங்கள், மரம், கல்தூண்கள் போன்றவற்றைக் கொண்ட பிராந்தியத்தின் உள்நாட்டு கட்டடக்கலைத் தன்மையை உள்ளடக்கி வடிவமைக்கப்படவுள்ளது.

தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகரிய செய்யும் பொருட்டு. கொற்கை, ஆதிச்சநல்லூர். சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர் கிராமத்தில் ரூ.33.02 கோடி மதிப்பீட்டுச்செலவில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு 18.05.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்ந அருங்காட்சியகத்தில் நிர்வாக தொகுதி தரைதளம் 5566 சதுர அடி, முதல்தளம் 5393 சதுர அடி, சிவகளை கட்டடத் தொகுதி தரைதளம் 6068 சதுரஅடி, முதல்தளம் 2923 சதுர அடி, ஆதிச்சநல்லூர் கட்டடத் தொகுதி A தரைதளம் 5097 சதுர அடி, முதல் தளம் 4271 சதுர அடி, ஆதிச்சநல்லூர் கட்டடத் தொகுதி B தரைதளம் 3509 சதுர அடி, முதல் தளம் 3509 சதுர அடி, கொற்கை கட்டடத் தொகுதி C தரைதளம் 7624 சதுர அடி, முதல்தளம் 5238 சதுர அடி, கொற்கை கட்டடத் தொகுதி D தரைதளம் 2420 சதுர அடி, முதல்தளம் 2147 சதுர அடி, கைவினை பொருட்கள் பணிமனை தரைதளம் மட்டும் 430 சதுர அடி என மொத்தம் 54,296 சதுர அடி பரப்பளவில் பொருநை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பண்டை தமிழரின் வாழ்வியல் பயன்படுத்திய பொருட்கள், கடல் வணிகம், போன்றவற்றை போற்றும் பல ஆதாரங்கள் கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளையின் கண்டறியப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகம் கட்டடப்பணி 26.06.2023 அன்று தொடங்கப்பட்டது. இக்கட்டடப்பணிகள் வரும் பொங்களுக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்திற்கு சங்ககால தாவரங்கள், மரங்கள் நட்டு பராமரிக்கவும், பூங்காக்கள், பேட்டரி வாகன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

முன்னதாக பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அரங்கத்தினை சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆய்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜீ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜலா சத்தியானந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory