» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தைகள் ஆபாச படம்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

திங்கள் 11, மார்ச் 2024 5:08:53 PM (IST)

குழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குழந்தைகள் நடித்த ஆபாச படத்தை பார்த்ததாக காவல்துறையினர் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக் கோரி இளைஞர் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குழந்தைகள் நடித்த ஆபாச விடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும், மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே குற்றம் எனத் தெரிவித்து காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஒரு தனி நீதிபதி எப்படி இதுபோன்ற கொடூரமான கருத்தை கூற முடியும்” என்று கண்டனத்தை பதிவு செய்தார். தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்தை 3 வாரத்துக்குள் திரும்பப் பெற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

வினேதினிMar 11, 2024 - 07:45:35 PM | Posted IP 172.7*****

சூப்பர் தலைவா சீக்கிரம் வாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory