» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

திங்கள் 11, மார்ச் 2024 8:30:08 AM (IST)

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 16-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேசிய தேர்வு முகமையானது 2024-ம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் மூலம் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் (9-ந் தேதி) கடைசி நாள் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் ஆதார் சர்வர் பிரச்சினை மற்றும் ஒ.டி.பி. வருவதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் மாணவ, மாணவிகள் பெரும் அவதி அடைந்தனர். 

இந்த நிலையில் 2024-ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு விண்ணப்பம் பதிவு செய்ய வருகிற 16-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பிக்க முடியாமல் தவித்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory