» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்: சிறையில் அடைக்கப்பட்டார்!
வியாழன் 7, டிசம்பர் 2023 10:29:02 AM (IST)
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்!

பின்னர் உடல் நலம் தேறியதையடுத்து புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 15 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் சிறைக்காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவக் குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியாா் மினி பஸ்களை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ஞாயிறு 11, மே 2025 11:51:14 AM (IST)

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)

அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
சனி 10, மே 2025 8:21:06 PM (IST)

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு தகவல்
சனி 10, மே 2025 5:51:33 PM (IST)

ஆம்புலன்ஸ் பணிகளுக்கு மே 12ல் ஆட்கள் தேர்வு முகாம்: ஆட்சியர் தகவல்
சனி 10, மே 2025 4:47:43 PM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)
