» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வியாழன் 29, டிசம்பர் 2022 10:44:48 AM (IST)

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு செயல்திறன் பயிற்சி சிறந்த ஆய்வகங்களின் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வருகை தரும் வல்லுநர்கள் குழு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகின்றனர் இந்தக் கல்லூரியில் சிறந்த அனுபவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி உடன் கூடிய கடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

கல்லூரியில் உள்ள சிறந்த ஆய்வகங்களின் மூலம் மாணவர்கள் செய்முறை பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெறுகின்றனர். படிக்கும் போதே வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் வருகிறது. இது தொடர்ச்சியாக டிசிஎஸ் பன்னாட்டு நிறுவனத்தில் கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இயந்திர பொறியியல் துறையை சார்ந்த இரு மாணவர்கள் மாரியப்பன் மற்றும் ப்ளெஸ்சன் ராஜா மேலும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் சார்ந்த வேல்முருகன் அவர்களுக்கு ஆண்டு வருமானம் 3.6 லட்சத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதுக்காக கல்லூரி நிர்வாகத்தில் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஊக்கமும் உற்சாகம் அளித்த கல்லூரி பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் கிளிங்டன் முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரை ஸ்காட் குழுவ நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory