» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் : அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்!

சனி 15, ஆகஸ்ட் 2026 10:31:19 AM (IST)

Ntplbike.jpg

தூத்துக்குடியில் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.

தூத்துக்குடி என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 90,700 வீதம் மொத்தம் ரூ.45,35,000 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார். 

என்.எல்.சி. குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் .காமாட்சி, என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை அதிகாரி அரவிந்த் ராஜா, பொது மேலாளர் (பராமரிப்பு) பொன்னுசாமி, துணை பொது மேலாளர் (மனிதவளம்) சரவணன் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

naan thaanAug 15, 2026 - 11:41:45 AM | Posted IP 162.1*****

என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு CSR நிதியிலிருந்து தூத்துக்குடியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கினார்ன்னு சொல்லணும் , ஊரு வீடு நெய் ல பலகாரம் செய்வது நன்று அல்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory