» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் நகை, வெள்ளி மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த வாலிபரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலுசாமி என்பவர் நாகர்கோவிலில் ரயில்வே கார்டாகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மேனகாவுடன் (43) கோட்டாறு ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார். 

கடந்த 29-ஆம் தேதி பாலுசாமி வேலைக்குச் சென்ற நிலையிலும், மேனகா மருந்து வாங்க விஸ்வாசபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற நிலையிலும், வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். வீட்டிலிருந்த 13.5 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ₹2,500 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். 

இது குறித்துக் கோட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மூலம் கைரேகைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
 
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய வாலிபர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும், நாகர்கோவில் ரயில் நிலைய அருகே தங்கி ஒரு கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. திருட்டு சம்பவத்திற்குப் பிறகு அவர் தலைமறைவாகியிருந்தார். 

இதையடுத்துத் தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த வாலிபரைச் சுற்றி வளைத்துப் பிடித்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட நகைகளை அவர் விற்பனை செய்துவிட்டது தெரியவந்துள்ள நிலையில், நகைகளை மீட்கத் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory