» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தொண்டு நிறுவனங்களை ஒடுக்கும் சட்டமா FCRA?: பா.ஜ. நிர்வாகி சுதா விளக்கம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:06:42 AM (IST)
FCRA சட்டம் வெளிநாட்டு நிதியின் வரவு மற்றும் பயன்பாட்டில் சட்டப்பூர்வமான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே கொண்டு வரப்பட்டது என பாஜக நிர்வாகி விளக்கமளித்துள்ளார்.
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டமான FCRA (Foreign Contribution Regulation Act), இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களைக் (NGO) கட்டுப்படுத்துவதற்கோ அல்லது ஒடுக்குவதற்கோ ஆன சட்டம் அல்ல என்றும், வெளிநாட்டு நிதியின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான சட்டம் மட்டுமே என்றும் பா.ஜ. நிர்வாகி சுதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி எந்த நோக்கத்திற்காகப் பெறப்படுகிறதோ, அதே நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறதா மற்றும் அதற்கான கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதே இச்சட்டத்தின் வேலை.
உள்நாட்டு - வெளிநாட்டு நிதி வித்தியாசம்: இந்தியாவில் உள்ள ஆதாரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகளுக்கு FCRA பொருந்தாது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும்போது மட்டுமே FCRA விதிகள் பொருந்தும்.
வெளிநாட்டு நிதி கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தவறாகப் பயன்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு அமைப்பின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டால், அந்த அமைப்பு இயங்கக் கூடாது என்று அர்த்தமல்ல; வெளிநாட்டு நிதியைப் பெற முடியாது, அவ்வளவே. சட்டப்பூர்வமான உள்நாட்டு நிதியைக் கொண்டு தொடர்ந்து சமூகப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
எனவே, FCRA சட்டம் வெளிநாட்டு நிதியின் வரவு மற்றும் பயன்பாட்டில் சட்டப்பூர்வமான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே கொண்டு வரப்பட்டது என சுதா தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)



க.கணேசன்.Aug 15, 2026 - 10:08:20 PM | Posted IP 104.2*****