» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வாரம் 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 7:46:41 AM (IST)

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நேரத்தை உடனடியாக அமல்படுத்தி அறிவிக்கக் கோரி, அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பின் (UFBU) சார்பில் தூத்துக்குடியில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பீச் ரோடில் உள்ள 381 வங்கி வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, UFBU தூத்துக்குடி வங்கி தொழிற்சங்க நிர்வாகி திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி செந்தில்குமரன் வரவேற்புரையாற்றினார்.
இப்போராட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், துரைராஜ், மைக்கேல் ஞானராஜ் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி தொழிற்சங்க நிர்வாகி சன்னாசி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினர்.
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, வாரத்தில் 5 நாட்கள் பணியை உடனடியாக அரசு மற்றும் வங்கி நிர்வாகம் பிரகடனப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)



உழைக்கும் கோமாளிAug 13, 2026 - 09:33:31 AM | Posted IP 172.7*****