» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜிபே, போன்பே கட்டாயமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:39:23 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டுமே ஏற்கப்படுவதால் ஏழை மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், நேரடியாகவும் பணத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது, 'ஜிபே' அல்லது 'போன்பே' போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து வரும் பலரிடம் இதுபோன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அவர்களிடம் நேரடியாகப் ரொக்கப் பணம் இருந்தாலும், டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் எனக் கூறுவதால் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் வசதி இல்லாதவர்களிடம் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
இப்பிரச்சினையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டுப் பொதுமக்களின் சிரமத்தைப் போக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
BabuAug 11, 2026 - 06:38:40 PM | Posted IP 172.7*****
make in india nu solvanuga pone pay google pay indian companya?idia approval kuduthututa athu india co airuma ?ama cash vanguna yenna keedu ipo yenga ponalum athu post off railway station online pana solranuga makkaluku kastam ana intha mathiri idea yevan than kudukurano online panita nalathu nu
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)



உண்மAug 14, 2026 - 08:37:27 AM | Posted IP 162.1*****