» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் : உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 5, ஆகஸ்ட் 2026 9:55:27 AM (IST)
பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் அனுப்பியது தொடர்பாக சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ஓட்டப்பிடாரத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டது சொல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலராக பெனிஷ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வரும் ராமேஸ்வரன் என்பவரிடம் சாதி ரீதியாக நடத்தியதாகவும், மேலும் பெண் ஆசிரியர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஒழுங்கற்ற மெசேஜ் அனுப்பி, மதிய உணவு வேளையில் அவருக்கு தொந்தரவு செய்ததாக கூறி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கரை, ஓட்டப்பிடாரம் வட்டார கல்வி அலுவலராக பணி மாற்றம் செய்தனர்.
இந்த பணி மாற்றம் தன்னை பழிவாங்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறி வட்டார கல்வி அலுவலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிட்டார். அதன்பேரில் மதுரை உயர்நீதிமன்றம் கிளை, வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர் இடமாறுதல் உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் இடைக்கால உத்தரவை எதிர்த்து வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர், பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் ஒழுங்கற்ற மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்ததாக புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெனிஷ்கர், அதே வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தால் இந்த விசாரணை பாதிக்கப்படும் நிலை ஏற்படும், அவர் பழிவாங்கல் காரணமாக இடம் மாறுதல் செய்யப்படவில்லை.
நிர்வாக காரணமாகவே பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மீண்டும் முறையிடப்பட்டது. அதன்படி மீண்டும் விசாரணை செய்த நீதிமன்றம், இடம் மாறுதல் தொடர்பாக அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய இடமாற்ற உத்தரவு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலராக மாணிக்கராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)



BeniskarAug 5, 2026 - 01:52:37 PM | Posted IP 162.1*****