» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)

கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்பி மனு அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் விரிவான கோரிக்கை மனு ஒன்றை நேரில் சமர்ப்பித்தார்.
இந்த மனுவில், கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தினசரி ரயில் பயணிகள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தற்போதுள்ள ரயில்களின் சேவையை நீட்டித்தல், புதிய ரயில்களை இயக்குதல், ரயில் சேவைகளை அதிகரித்தல், பயணிகள் வசதிக்கேற்ப கால அட்டவணையில் மாற்றம் செய்தல், தேவையான இடங்களில் கூடுதல் நிறுத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த கோரிக்கை மனுவில் விரிவாக இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)

பொதுமக்களின் அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி : இல்லம் தேடிச் செல்லும் இலவச எப்ஐஆர் நகல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:02:53 AM (IST)

மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாள் விழா : ஆட்சியர் பிரதாப் மரியாதை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:13:45 PM (IST)


