» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசை முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடைவிழா நாளை தொடக்கம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 10:45:08 AM (IST)

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக் கொடைவிழா நாளை (திங்கள்கிழமை) தொடங்குவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும் ஆடிக் கொடைவிழா, நாளை இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குவதைத் தொடர்ந்து இரவில் வில்லிசை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி, 8 மணி, மாலை 5 மணி மற்றும் இரவு 7 மணிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். காலை 10 மணி மற்றும் இரவு 11 மணிக்குக் கும்பம் திருவீதி உலா நடைபெறும். மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.

ஆகஸ்ட் 5 (புதன்கிழமை): காலை 8 மணி மற்றும் மதியம் 12 மணிக்கு அன்னதானம், பகல் 11:30 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்குச் சிறப்பு மகுடாட்டம் ஆகியவை நடைபெறும்.மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8:30 மணிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

விழாவையொட்டி நாளை காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 4-ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்திற்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சுமார் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

மக்கள்Aug 3, 2026 - 10:41:24 PM | Posted IP 104.2*****

தூத்துக்குடி மூன்றாவது மைல் மெயின் ரோட்டில் 9 நாட்களாக விழா நடக்கிறது ஒரு Km மீட்டருக்கும் மேலாக ஒலி பெருக்கி , ஒளி அமைப்புகள் கட்டப்பட்டு இரவு 11 : 30 க்கு மேலாக விழாநடக்கிறது, அதிகமாக மக்களுக்கு இடையூராக ஒலி சத்தம் மிகவும் அதிகமாக உள்ளது , இதை மாநகராட்சியோ காவல்துறையோ கண்டு கொள்வதில்லை , வரும் நாட்களில் ஒலி பெருக்கி சத்தத்தை கட்டுப்படுத்துமாறு தமிழக அரசிடம் வெண்டுகிறோம்,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory