» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசியல் நாகரிகமின்றி அவதூறு பரப்புவதா? - அமைச்சர் நிர்மல் குமாருக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!

சனி 1, ஆகஸ்ட் 2026 5:10:36 PM (IST)

அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் நாகரிகமின்றி அவதூறு பரப்புவதாக திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர், பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் என் மீது அவதூறு பரப்பிப் பேசியுள்ளதாகத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மழை வெள்ளக் காலங்களில் தூத்துக்குடியில் யாருமே களத்திற்கு வரவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் உண்மையைப் மறைத்துப் பேசியுள்ளார். வெள்ளப் பாதிப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்ற முறையில் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் நேரடியாகச் சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டோம். 

அன்றைய துணை முதல்வர் மற்றும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து உடனடி தீர்வை ஏற்படுத்தினர். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்காமல் புறமுதுகு காட்டி ஓடியவர்கள், தூத்துக்குடி நிவாரணப் பணிகளைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் திமுகவினர் வசூல் செய்வதாக நிர்மல் குமார் பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். திமுகவினர் அப்படி யாரிடமும் நிதி வசூலிக்கவில்லை. வசூல் செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டை நிர்மல் குமாரால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபிக்கத் தவறினால் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதிகாரமும் பேச வாயும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தைத் தூக்கி எறிய வேண்டும். பல கட்சிகளுக்குத் தாவிய பச்சோந்தி நிர்மல் குமார், இனியாவது கண்ணியத்துடன் பேசப் பழக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பிரபுAug 1, 2026 - 08:39:45 PM | Posted IP 162.1*****

சரியான செருப்படி 🔥

Antony Paul Raj PAug 1, 2026 - 05:29:36 PM | Posted IP 172.7*****

After 30 years as MLA (DMK alone), why water problem in THOOTHUKUDI?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory