» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி 1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆய்வு: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வெள்ளி 31, ஜூலை 2026 4:09:59 PM (IST)

தூத்துக்குடி 1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆய்வு நடைபெற்று வருவதாக மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தைத் தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
வரவிருக்கும் மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும் நகரில் உள்ள சிறிய மற்றும் பெரிய கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் முழுமையாகத் தூர்வாரப்பட உள்ளன.
பொதுமக்கள் குடிநீரை வீணாக்கக் கூடாது. குடிநீரைச் செடிகளுக்குப் பாய்ச்சுவதற்கும், கட்டிடப் பணிகளுக்கும் பயன்படுத்துவது தவறான செயலாகும். இதனை மீறுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே பாலம் ஆய்வு:
கூட்டத்தில் திமுக உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், "தூத்துக்குடி நகரில் அடிக்கடி ரயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் பொதுமக்கள் பெரும் போக்குவரத்து நெரிசலிலும் சிரமத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய மேயர், "பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், தூத்துக்குடி 1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
தவெக உறுப்பினர் வெளிநடப்பு:
முன்னதாக, இக்கூட்டம் தொடங்கியபோது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் மந்திர மூர்த்தி, தனக்கு மன்றத்தில் உரிய இருக்கை ஒதுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து, மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மக்கள் கருத்து
ஏமாந்த கூட்டத்துல ஒருத்தன்Aug 2, 2026 - 01:23:17 PM | Posted IP 172.7*****
1ஆம் கேட் முதல் 5 ஆம் இரயில்வே கேட் கள் அத்யாவசிய தேவையாக உள்ளது., 4 ஆம் கேட் தவிர்த்து. கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே 1ஆம் கேட் மற்றும் 2ஆம் கேட் மேம்பாலம் வரவேண்டியது. செய்வினை செஞ்சு முடிக்கிட்டாங்க கடை வியாபாரிகள்!!! 2026லாவது விட்டு கொடுப்பார்களா? இல்லாட்டி கொடுக்க வேண்டிய இடத்துலே காசு கொடுத்து இத்திட்டத்தை மீண்டும் முடக்குவாங்க.தூத்துக்குடி மாநகராட்சி முன்னேறாததுக்கு முக்கிய காரணமே வியாபாரிகள் தான்,,,,, அன்றும் இன்றும் என்றும்?!???
ஏமாந்த கூட்டத்துல ஒருத்தன்Aug 2, 2026 - 01:23:16 PM | Posted IP 162.1*****
1ஆம் கேட் முதல் 5 ஆம் இரயில்வே கேட் கள் அத்யாவசிய தேவையாக உள்ளது., 4 ஆம் கேட் தவிர்த்து. கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே 1ஆம் கேட் மற்றும் 2ஆம் கேட் மேம்பாலம் வரவேண்டியது. செய்வினை செஞ்சு முடிக்கிட்டாங்க கடை வியாபாரிகள்!!! 2026லாவது விட்டு கொடுப்பார்களா? இல்லாட்டி கொடுக்க வேண்டிய இடத்துலே காசு கொடுத்து இத்திட்டத்தை மீண்டும் முடக்குவாங்க.தூத்துக்குடி மாநகராட்சி முன்னேறாததுக்கு முக்கிய காரணமே வியாபாரிகள் தான்,,,,, அன்றும் இன்றும் என்றும்?!???
மேலும் தொடரும் செய்திகள்

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)

கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)

பொதுமக்களின் அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி : இல்லம் தேடிச் செல்லும் இலவச எப்ஐஆர் நகல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:02:53 AM (IST)



ஏமாந்த கூட்டத்துல ஒருத்தன்Aug 2, 2026 - 01:24:08 PM | Posted IP 172.7*****