» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பணம் வைத்து சூதாட்டம்: 6பேர் கும்பல் சிக்கியது!
திங்கள் 29, ஜூன் 2026 5:20:24 PM (IST)
ஆறுமுகநேரி அருகே பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 31,240 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை ரோடு பகுதி கோவில் அருகில் சிலர் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாடுவதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குப் பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குரும்பூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (39), மாடசாமி (42), ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (62), ரெக்ஸ்டன் (31), அழகர் (44) மற்றும் புறா முருகன் (68) ஆகிய 6 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள் மற்றும் 31,240 ரூபாய் ரொக்கப் பணத்தை உதவி ஆய்வாளர் இருதயராஜ் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)


