» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 4¾ பவுன் தங்க நகைகள் திருட்டு - வாலிபர் கைது!

சனி 27, ஜூன் 2026 4:07:34 PM (IST)



தூத்துக்குடியில், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் கதவை உடைத்து 4¾ பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாலகணேசன் (36). ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை அவர் தனது ஆட்டோ சவாரிக்குச் சென்றுவிட்டார். அவரது மனைவி புதிய முத்தூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றிருந்ததால் வீடு பூட்டப்பட்டிருந்தது.

மதியம் சுமார் 02:30 மணி அளவில் பாலகணேசன் சவாரி முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்கத் தலைவாசல் கதவைத் திறக்க முயன்றபோது, அது உள்பக்கமாகப் பூட்டப்பட்டுத் திறக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் காவுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில், மாப்பிள்ளையூரணி, பூபாண்டியபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் இசக்கிமுத்து (18) என்ற யோகீஸ்வரன் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 4¾ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory