» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : தற்காலிகக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன!

புதன் 24, ஜூன் 2026 3:15:25 PM (IST)



கோவில்பட்டி நகரின் முக்கியப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் இன்று அதிகாரிகளால் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் மற்றும் காந்தி மண்டபம் முன்பாக நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களில் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். குறிப்பாக, அப்பகுதியில் பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்தும், காந்திய சிந்தனைகளுக்கு மாறாகவும் செயல்பட்டு வந்த இறைச்சி உணவுப் பொருட்கள் விற்பனைக் கடைகளும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன.

நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை:

தற்போது தற்காலிக ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ள நிலையில், காந்தி மண்டபத்தின் முன்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இடத்தை முழுமையாக அளவீடு செய்து, அங்குள்ள நிரந்தர ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.


மக்கள் கருத்து

Saravana kumarJun 26, 2026 - 06:54:01 PM | Posted IP 172.7*****

Kovilpatti loyal mill colony,poornammal colony road romba mosdm.paathi road pottanga.meedhi road podave illa.. meedhi road ean podala? 3 varusa ahudhu ...kinaru irukku adhu varaikum3 moonu varusam munbu road pottanga...kinatthukku appuram road podave illa..kundu kulyuma irukku.

RamanJun 25, 2026 - 01:48:08 PM | Posted IP 162.1*****

கோவில்பட்டி நகரின் பெரும்பான்மையான தெருக்களில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மேம்படுத்தப் பட்ட இணைப்பு வழங்கும்போது தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்படாமல் ஆங்காங்கே மண் திட்டுகளாகவும் குழிகளாகவும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் சரிசெய்து கொடுக்குமா, அல்லது குடியிருப்புவாசிகளே சரி செய்து கொள்ள வேண்டுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory