» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கனிமொழி எம்பி காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:26:51 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி அருகே கனிமொழி கருணாநிதி எம்பி சென்ற காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி கருணாநிதி எம்பி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்துவிட்டு கனிமொழி எம்பி தனது காரில் தூத்துக்குடி நோக்கிப் புறப்பட்டார். அவருடன் காரில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இருந்தனர்.
கார் விளாத்திகுளம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்குச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் காரை மறித்து நிறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் காரின் பின்புறப் பெட்டியை (டிக்கி) திறந்து சோதனையிட்டனர். மேலும், வாகனத்திற்குரிய ஆவணங்களையும் வாங்கிச் சரிபார்த்தனர்.
முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர் இருந்த காரைத் தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் சிக்காததைத் தொடர்ந்து, அதிகாரிகள் காரைச் செல்ல அனுமதித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 10:54:53 AM (IST)

பிரதமர் மோடி நாளை நாகர்கோவில் வருகை : போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:33:18 AM (IST)

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)


ஒட்டு போட்ட முட்டாள்Apr 14, 2026 - 04:33:12 PM | Posted IP 172.7*****