» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:16:08 PM (IST)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், இன்று 30-வது வார்டு டூவிபுரம் விநாயகர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தைத் தொடங்கினார். டூவிபுரம் மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
"முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோதும், நான் இதே மார்க்கெட்டில் வாழை இலை ஏலம் விடும் தொழிலைச் செய்து, உங்களில் ஒருவனாகவே பழகி வந்தேன். தொழிலாளர்களின் தோழனான எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்," என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
பிரசாரத்தில் காய்கறி மார்க்கெட் தலைவர் எஸ்டிஎஸ் ஞானராஜ், மேலாளர் நியூட்டன், அதிமுக நிர்வாகிகள் மில்லை ராஜா, ஆறுமுகநயினார் மற்றும் பாஜக மாவட்டப் பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம் உட்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 10:54:53 AM (IST)

பிரதமர் மோடி நாளை நாகர்கோவில் வருகை : போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:33:18 AM (IST)

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)


BabuApr 13, 2026 - 10:23:59 PM | Posted IP 104.2*****