» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மின்விளக்கு தூணில் விளம்பரப் பலகை : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 7:50:33 PM (IST)

தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள முக்கியச் சந்திப்பில், போக்குவரத்திற்கு இடையூறாகக் கட்டப்பட்டுள்ள தனியார் பள்ளி விளம்பரப் பலகையால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி குரூஸ்புரம் பக்கிள் ஓடை 5 வழிச்சாலை சந்திப்பில் மாநகராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தூணில், தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விளம்பரப் பலகை ஒன்று அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இந்தப் பலகை சாலையை நோக்கி நீட்டிக்கொண்டு இருப்பதால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் அதன் மீது மோதாமல் இருக்க விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியச் சந்திப்பு என்பதால் எப்போதும் வாகன நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், விளம்பரப் பலகையைத் தவிர்க்க வாகனங்கள் திடீரெனத் திரும்புவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தனியார் பள்ளியின் இந்த அத்துமீறிய செயலால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சாலைப் பகுதியில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அந்த விளம்பரப் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காமல் இருக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
BabuApr 13, 2026 - 07:14:34 AM | Posted IP 104.2*****
orukulla road latchanam yellam unga kannuku therilaya
மனிதன்Apr 12, 2026 - 08:03:35 PM | Posted IP 104.2*****
டேய் டேய் இதெல்லாம் நியாயமா? ஆண்ட கட்சி, ஆளும் கட்சி காரங்க எவ்வளவோ பொது இடத்துல விளம்பர பலகைகள் வைக்காங்க, அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையாடா... ஒரு பள்ளிக்கு படிக்க சேருங்கடா னு விளம்பர பலகை வைக்கிறது உங்க கண்ணுக்கு உறுத்துதா....
மேலும் தொடரும் செய்திகள்

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

நள்ளிரவில் காய்கறி வியாபாரியின் ஆட்டோ எரிந்து சேதம் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:25:27 AM (IST)

பைக் மீது கனிமவள லாரி மோதி விபத்து : தந்தை கண்முன்னே மகள் பலி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:45:04 AM (IST)


ஏரியா காரன்Apr 13, 2026 - 09:41:55 AM | Posted IP 162.1*****