» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 8:12:50 AM (IST)
கோவில்பட்டி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகத் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்குத் திங்கட்கிழமை இரவு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாத்தூர் பிரதான சாலையைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் அருண் (32) என்பது தெரியவந்தது. அருண் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் தனது தாயைப் பார்ப்பதற்காகச் சென்னையிலிருந்து ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்துத் தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தாயைக் காண வந்த இடத்தில் இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)

குமரியில் ஏப்ரல் 12-ல் விஜய் தேர்தல் பிரச்சாரம்: தவெக தொண்டர்கள் உற்சாகம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:29:22 PM (IST)

குமரி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு: புகார் எண்கள் அறிவிப்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:20:50 PM (IST)

தேர்தல் பொது பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பங்கேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 10:13:57 AM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 53.57 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:54:17 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இருவழிப் பாதை: கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:47:33 PM (IST)


BabuApr 8, 2026 - 11:19:21 AM | Posted IP 172.7*****