» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் உடைந்த கால்வாய் மூடிகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வெள்ளி 27, மார்ச் 2026 5:55:33 PM (IST)

தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் அருகே உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடிகளைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் மற்றும் நவீன கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் பால விநாயகர் கோவில் தெருவிலும் புதிய சாலை மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அமைக்கப்பட்ட சில காலத்திலேயே கழிவுநீர் கால்வாயின் மேல் மூடப்பட்டுள்ள சிமெண்ட் மூடிகள் பல இடங்களில் உடைந்து சேதமடைந்துள்ளன.
இந்த உடைந்த மூடிகள் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்தவிதமான சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காய்கறி மார்க்கெட் அருகாமையில் இருப்பதால் இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இரவு நேரங்களில் இந்த உடைந்த குழிகளை கவனிக்காமல் செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தடுமாறி விழுந்து காயமடையும் சூழல் நிலவுகிறது.
இருசக்கர வாகனங்கள் இந்த உடைப்புகளில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயமும் நீடிக்கிறது. பெரிய அளவில் உயிர்ச் சேதமோ அல்லது விபத்தோ ஏற்படும் முன், மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடைந்த கழிவுநீர் கால்வாய் மூடிகளைப் புதிய மூடிகளாக மாற்றி அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
ஏரியா காரன்Mar 27, 2026 - 10:02:46 PM | Posted IP 172.7*****
ஸ்மார்ட் சிட்டி நா என்னனென்று தெரியாது , வாரம் வாரம் கவனிக்கமாட்டார்கள் , ரிப்பேர் / பராமரிப்பு செய்ய மாட்டார்கள் ,எல்லாம் துட்டு பயலுக
மேலும் தொடரும் செய்திகள்

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)


BabuMar 28, 2026 - 08:03:44 AM | Posted IP 104.2*****