» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மீளவட்டான் சாலை, சின்னக்கண்ணுபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையக் கட்டிடம், நேற்று முன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் இரவு நேரத்தில் நடந்ததால், அங்கு பயின்று வரும் சுமார் 30 குழந்தைகள் எவ்விதப் பாதிப்புமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். ஒருவேளை இந்த விபத்து பகல் நேரத்தில் நிகழ்ந்திருந்தால், பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்பது நினைத்தாலே அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையம், அண்மையில் கடந்த அக்டோபர் மாதம்தான் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மேற்கூரை இடிந்து விழுந்திருப்பது, அதிகாரிகளின் அலட்சியத்தையும், கட்டிடப் பராமரிப்பில் நிலவும் முறைகேடுகளையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
இடிந்து விழுந்த அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக ஆய்வு செய்து, அதனை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் அல்லது புதிய பாதுகாப்பான கட்டிடமாக மாற்ற வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அங்கன்வாடி மையக் கட்டிடங்களின் உறுதித்தன்மையையும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யாமல், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)

