» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:14:13 PM (IST)
தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய, திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் அண்ணா நகர் 7-வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குத் தெற்கு மாவட்ட மகளிர் அணித் தலைவி வெள்ளத்தாய் அன்னராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக, வில்லிசைப் பாடகி ஜெயலலிதா, திமுக அரசைக் கண்டிக்கும் வகையில் வில்லிசைப் பாடல் கச்சேரி நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் தேன்மொழி, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஜமுனா, வடக்கு மண்டலத் தலைவி சுதா, ஆன்மீகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவி உஷாதேவி, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இணைச் செயலாளர் தங்கத்தாய் பிரபாகரன், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம் சக்தி பிரபு, ஓ.பி.சி அணி பொதுச் செயலாளர் வன்னியராஜ், மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, மாவட்டத் துணைத் தலைவர் ரஞ்சனா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)


BalaFeb 10, 2026 - 09:59:59 PM | Posted IP 162.1*****