» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட கப்பல் ஊழியருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:57:10 AM (IST)
சாத்தான்குளம் அருகே மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட கப்பல் ஊழியர் பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ராமராஜன் (26) என்பவர், தனது நண்பரின் இருசக்கர வாகனம் பழுதானதால் அவருக்கு உதவ இடைச்சிவிளை தேரிவிளை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது தேரிவிளையில் சாலையை மறைத்து ஜெயமுருகன், ராகுல், செல்வம் உள்ளிட்ட 5 பேர் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களை வழிவிடுமாறு ராமராஜன் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர் பாட்டிலால் ராமராஜனை சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தட்டார்மடம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)


தமிழன்Feb 9, 2026 - 01:17:38 PM | Posted IP 162.1*****