» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாநகரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் : இளைஞர்கள் கோரிக்கை!!

திங்கள் 15, செப்டம்பர் 2025 11:20:59 AM (IST)



தூத்துக்குடி மாநகரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என்று இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பின் தலைவர் கிங்ஸ்டன், செயலாளர் இஸ்ரவேல் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாநகரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைய வழிவகை செய்ய வேண்டும். 

பருவமழை துவங்கும் முன்பாக மாநகர் பகுதிகளில் சாலை, கால்வாய், மேம்பாலம் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். 3ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பர்னிச்சர் பார்க்கை விரைவில் திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

KANNAN SKDSep 15, 2025 - 12:52:19 PM | Posted IP 172.7*****

போதுமான பேராசிரியர்களுடன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory