» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரதமர் மோடிக்கு பேனர் வைத்த அதிமுக பிரமுகர் : தூத்துக்குடியில் பரபரப்பு!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:02:04 AM (IST)

தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வழக்கறிஞர் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் நகரின் பல பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் தமிழகத்திற்கு ஒதுக்கிய நலத்திட்டங்கள், அக்னிபாத், மேக் இன் இந்தியா, ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வஉசி துறைமுக மேம்பாட்டு பணிகள், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயில் சேவை, குமரி - அந்தியோத்யா இரயில் சேவை போன்ற திட்டங்களை குறிப்பிட்டு பிரதமருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வழக்கமாக திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டுவது, பேனர்கள் வைப்பது வழக்கம். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செங்குட்டுவன், பாஜகவினரையே மிஞ்சும் வகையில் தூத்துக்குடி முழுவதும் பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு டிஜிட்டல் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

iLANGOSep 15, 2025 - 01:31:51 PM | Posted IP 162.1*****