» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 8:23:14 PM (IST)
கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களை பாதுகாக்க உடனடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தினார்.
அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பினால் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு தடுப்பு சுவர், தூண்டில் வளைவுகள், மற்றும் பாதிப்படைந்த கடற்கரையோர சாலைகளை செப்பனிட மத்திய அரசு நிதியினை ஒதுக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் பேசினார் .
நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அவர் பேசியதாவது : குமரி மாவட்டத்தின் 72 கி,மீ தூரம் உள்ள கடற்கரையில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் கடலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பி உள்ளனர். அடிக்கடி நிகழும் கடலரிப்பு காரணமாக இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் கடற்கரை சாலைகள் கடலரிப்பினால் மிகவும் சேதமடைந்து மக்கள் பயணம் செய்ய இயலாத நிலையில் உள்ளது.
கடற்கரை கிராமங்களை காப்பதற்கு தடுப்பு சுவர்கள் கட்டவும், தூண்டில் வளைவுகள் அமைக்கவும், சாலைகளை செப்பனிடவும் மத்திய அரசு உடனடியாக போதிய நிதியினை ஒதுக்க வேண்டும். மேலும் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு போதிய இழப்பினை வழங்கவும் அரசு முன்வர வேண்டும். கடலரிப்பினை தடுக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுப்பதுடன், மாறி வரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் மீனவர்களுக்கு போதிய வளர்ச்சி திட்டங்களை அரசு கட்டமைக்க வேண்டும் என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)


.gif)