» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் ரூ.85.36 கோடி மதிப்பில் சாலை பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
செவ்வாய் 29, ஜூலை 2025 4:04:13 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளில் ரூ.85.36 கோடி மதிப்பில் சாலை பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளில் சாலை பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திருவட்டார் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கலந்து கொண்டு, சாலை பணியினை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி கேட்க கேட்க அள்ளித் தருகின்ற ஒரு ஆட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் நமது மாவட்டத்திற்கு சாலை பணிகள், சுற்றுலா மேம்பாட்டு பணிகள், பாலப்பணிகள், மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிட பணிகள், புதிய பேருந்து நிலைய பணிகள் என பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஏராளமான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதனடிப்படையில் நம்முடைய மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று நமது மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 29 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.24.21 கோடி மதிப்பில் 44.966 கிலோ மீட்டர் நீளத்தில் 35 சாலை பணிகளும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.07 கோடி மதிப்பில் 4.886 கிலோ மீட்டர் நிளத்தில் 2 சாலை பணிகளும், நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 13 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.58 கோடி மதிப்பில் 22.646 கிலோ மீட்டர் நீளத்தில் 13 சாலை பணிகளும், சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.44.01 கோடி மதிப்பில் 39 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 76.387 கிலோ மீட்டர் நீளத்தில் 59 பணிகளும், மாநில பகிர்வு நிதி திட்டத்தின் கீழ் 6.48 கோடி மதிப்பில் 10 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 பணிகள் 11.357 கிலோ மீட்டர் நீளம் என மொத்தம் ரூ.85.36 கோடி மதிப்பில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு 121 பணிகள் 160.242 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பான திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் பொதுமக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் நம்முடைய மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள். நம் முதல்வர் எப்போதும் தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார்கள்.
மேலும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் நலத்திட்ட உதவிகளும் கடைகோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அரசானது மக்களுக்கான அரசு அதாவது எல்லோருக்குமான அரசாகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அற்புதமான அரசு. நம்முடைய மாவட்டத்தை பொருத்தவரையில் ஏற்கனவே பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், அந்த சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கம் வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் இருக்கின்றன.
நாம் அவற்றினை பயன்படுத்தி, இன்னும் நம்முடைய மாவட்டத்தினை வளர்த்தெடுக்க எல்லோரும் இணைந்து செயலாற்றுவோம். மாவட்ட நிர்வாகம், அனைத்து பேரூராட்சிகள் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), உதவி இயக்குனர் பேரூராட்சிகள் இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் பாண்டிராஜன், திருவட்டார் செயல் அலுவலர் தர்மகுலசிங்கம், பேரூராட்சி தலைவர்கள் பெனிலா ரமேஷ் (திருவட்டார்), ஜான் கிறிஸ்டோபர் (குமாரபுரம்), பில்கான் (விலாவூர்), ஜெயந்தி (குலசேகரம்), கிறிஸ்டல் பிறேமகுமாரி (கோதநல்லூர்), பீனா அமிர்தராஜ் (ஆற்றூர்), ஜெயகுமார் (வேர்கிளம்பி), ஜெனுஷா ஜோன் (முளகுமூடு), நசீர் (திருவிதாங்கோடு), பொன்ரவி (திற்பரப்பு), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)


.gif)