» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அனைத்து மாணவர்களும் கட்டாயமாக மேற்படிப்பு படிக்க நடவடிக்கை : ஆட்சியர் தகவல்

வெள்ளி 27, ஜூன் 2025 3:39:19 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களும் மேற்படிப்பு கட்டாயமாக படிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் 2024-2025 ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற/பெறாத மாணவர்கள் தொடர்நது கல்வி பயில வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கைக்கு இனங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உயர்வுக்கு படி எனும் திட்டத்தின் கீழ் கனவு கட்டுப்பாட்டு அறை கடந்த 21.5.2025 முதல் இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையில் மாணவர்களுக்கு தேவையான உயர்கல்வி தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி ஆலோசனைகள் பெற்று பல்வேறு தொழிற்கல்வி தொடர்பான படிப்பில் (பொறியியல்/வழக்கறிஞர்/வேளாண்பொறியியல்/ மீன்வளம் /மருத்துவம் மற்றும் பல) சேர்ந்துள்ளனர். மேலும் கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பட்டபடிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இம்மாணவர்களில், நாளது வரை எந்த மேற்படிபிலும் சேராதவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பினை தொடரஇயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு ஆலோசனையும், தகுதியான மாணவர்களுக்கு நிதியுதவி, கல்விக்கட்டண உதவிதொகையும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கி கல்லூரிகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2024 மற்றும் 2025 கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களை இல்லம் தேடி சென்று தொழிற்கல்வி தொடர்பான பட்டயபடிப்பு / பாலிடெக்னிக்/ தொழிற்பயிற்சி பள்ளிகளில் சேர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களும் மேற்படிப்பு கட்டாயமாக படிக்க வேண்டுமென்ற உன்னத நோக்குடனும், பொருளாதாரத்தை காரணமாக காட்டி படிக்க இயலவில்லை என்ற தடையை நீக்குவதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உயர்வுக்கு படி திட்டம் கீழ் கனவு கட்டுப்பாட்டு அறை அனைத்து வேலைநாட்களிலும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. 

மாணவர்கள் தங்களுக்கு தேவையான படிப்பு தொடர்பான ஆலோசனைகளை மற்றும் உதவிகளை நேரடியாக வந்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்வினையும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

N. AgnimuthuSep 14, 2025 - 10:14:21 PM | Posted IP 162.1*****

Hii sir: I am from kelasekkarakudi Thoothukudi district Tamilnadu Go, hi, sec, sch, kelasekkarakudi 628104 My dream Indian Army but not interested will the study but my school teacher's very complesre padikanum nu solluranga ans enakku padikka interested illa ana enakkum enga amma ku call panni mentel torture kutukanga plz don't return the phone call's please🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory