» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடியில் அதிதீவிர சிகிச்சை பிரிவு: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 15, மே 2025 3:36:42 PM (IST)

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், இரத்தம் மையம் மற்றும் கோட்டார் ஆயுர்வேத அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (15.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அதிதீவிர சிகிச்சை பிரிவு (Critical Care Ward) கட்டுமான பணிகள் நேரில் பார்வையிடப்பட்டதோடு, தொடர்ந்து பணிகள் குறித்த விளக்கங்களை பொறியாளர்களிடம் கேட்டறியப்பட்டது.
கட்டிட பணிகளை வேகமாகவும், நேர்த்தியாகவும், விரைந்தும் கட்டி முடிக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் (Tamil Nadu Medical Services Corporation Limited) மூலம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக தொடங்கப்படவுள்ள ECRC Mental Illness வார்டை புனரமைக்கும் பணியை உடனடியாக தொடங்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆண், பெண் நோயாளிகளை தனித்தனியாக பராமரிப்பதற்கு ஏதுவாக அமைத்துத் தரும்படி அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள இரத்த மையம் ஆய்வு செய்யப்பட்டது. இரத்த சேகரிப்பு அறை மற்றும் குருதி கூறுகள் (Component Separation) அறைகளுக்கு சென்று இரத்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு கொடையாளிகளை கேட்காமல் இரத்தம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இரத்த வங்கி அலுவலரிடம் வேறு மருத்துவமனைகளில் உள்ள ஒரு நோயாளிக்கு இரத்தம் தேவைப்பட்டால் கூட மருத்துவக் கல்லூரி வாகனம் மூலம் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவனையில் கூடுதலாக 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை ரூ.11.40 கோடி மதிப்பில் கட்டப்படும் என 2025-2026 நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்கள். இதற்காக அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இடம் உறுதி செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கூடுதல் புதிய கட்டிடமானது தரைத்தளத்துடன் 3 மாடி கட்டிடமாக சுமார் 6000 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
ஆய்வில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) சுரேஷ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கிங்ஸ்லி ஜெபசிங், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் (பொ) விஜயலெட்சுமி மோகன்தாஸ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருண் (பொ), சல்லிய தந்திர பிரிவு விரிவுரையாளர் சுனில், இரத்த வங்கி அலுவலர் ராகேஷ், செயற்பொறியாளர் ரன்ஸ், உதவி செயற்பொறியாளர் வாலி, உதவி பொறியாளர் மாரிதுரை, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் மே 24ல் மெகா வேலைவாய்ப்பு முகாம் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!
சனி 17, மே 2025 4:06:54 PM (IST)

மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!
சனி 17, மே 2025 3:44:44 PM (IST)

குமரியில் சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை
சனி 17, மே 2025 11:01:27 AM (IST)

கொத்தனார் மர்ம மரணம்: 8 ஆண்டுகளுக்கு பின் மனைவி கள்ளக்காதலனுடன் கைது!
சனி 17, மே 2025 10:58:37 AM (IST)

திருநெல்வேலி ஷாலிமார் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க விஜய் வசந்த் எம்பி கோரிக்கை
சனி 17, மே 2025 10:28:32 AM (IST)

அ.தி.மு.க, பேரூராட்சி தலைவியின் வெற்றி செல்லாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!
வெள்ளி 16, மே 2025 5:39:36 PM (IST)
