» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

தாழையூத்து சங்கர் நகர் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதிய விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே பள்ளமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் 59. இவரது வீடு பாளை., சிவன் கோவில் மேலரதவீதியில் உள்ளது. தினமும் பள்ளிக்கு காரில் செல்வார். தற்போது விடுமுறையில் இருந்தார். நேற்று பள்ளியில் ஒரு மாணவன் புதிதாக சேர்ந்தார். அந்த ஒரு மாணவன் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றார்.
பின்னர் மதியம் வீடு திரும்பினார். தாழையூத்து சங்கர் நகர் மேம்பாலத்தில் வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கியது. சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் அவரது தலையிலேயே இருந்தது. தாழையூத்து போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருந்தார். பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர்கள் ஒரு மாணவன் சேர்க்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் வரவேண்டாம் என கூறிய போதும்கூட அவர் டூவீலரில் பள்ளிக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 3, மே 2025 8:31:59 AM (IST)
