» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வியாழன் 1, மே 2025 11:49:33 AM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 7 மணிக்கு கொடிபட்டம் வீதி உலா நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 7ஆம் நாள் திருவிழாவில் மே 7ம் தேதி சாமி, அம்பாள் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வெள்ளை சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 8-ம் திருநாளான மே 8ம் தேதி அன்று பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் மகாகணபதி, முருகப்பெருமானும் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும், பின்னர் சுவாமி சங்கர ராமேஸ்வர பாகம் பெரிய அம்பாளுடன் பெரிய எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். தேரோட்டத்தில் மேள வாத்தியங்களுடன் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருவிழா நாட்களில் தினமும் நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 3, மே 2025 8:31:59 AM (IST)

Om Namakshivayaமே 2, 2025 - 02:03:22 PM | Posted IP 104.2*****