» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
புதன் 30, ஏப்ரல் 2025 10:06:36 PM (IST)
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைவராக எஸ்பி வாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தில் தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர்கள் ஸ்டீபன் அந்தோணி ராஜ், பிள்ளை விநாயகம், ராஜசேகர் சுப்பையா ஆகியோர் செயல்பட்டனர். சங்கத்தில் உள்ள 780 உறுப்பினர்களில் 704பேர் வாக்களித்தனர். பின்னர் மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில், வழக்கறிஞர் சங்கத் தலைவராக எஸ்பி வாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் துணைத் தலைவராக சிவசங்கர், செயலாளராக செல்வின், இணைச் செயலாளராக பாலகுமாரன், பொருளாளராக கணேசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக அரிமுருகன், சார்லஸ், மணிகண்டன், முனீஸ்குமார், ராஜ்குமார், ரமேஷ் செல்வகுமார், விக்னேஷ், முருகன், பிரவீன்குமார், ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்செல்வி, யூஜியானா, உஷா, ரெக்ஸ் அன்டோ ரோஷிடா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 3, மே 2025 8:31:59 AM (IST)

Dr.Y.J.A.Kalai Selvanமே 1, 2025 - 11:41:13 AM | Posted IP 104.2*****