» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: மாவட்ட ஆட்சியர், எம்.பி., வாக்களித்தனர்!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 10:27:40 AM (IST)



குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற வாக்குப் பதிவு தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் 7,76,127 ஆண் வாக்காளர்கள், 7,78,834 பெண்கள், 135 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15,55,096 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள். இவர்களுக்காக 1698 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டள்ளது. 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டக்  ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும், அவரது மனைவி விஜிதா ஸ்ரீதர் ஆகியோர் நாகர்கோவில் குருசடி பள்ளியில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய் வசந்த்  அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory