» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:02:10 PM (IST)



கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு சுழற்சி முறையில் வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு சுழற்சி முறையில் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷேஷகிரி பாபு, முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (05.04.2024) கலந்தாய்வு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடையே தெரிவிக்கையில் - இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளமையால் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் விளவங்கோடு சட்டமன்ற தொகதியை பொருத்தவரை ஒவ்வொரு வாக்காளர்களும் இரண்டு வாக்குகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் மூன்று மின்னனு இயந்திரங்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் கன்னியாகுமரி பாராளுமன்றத்திற்கு ட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சுழற்சி முறையில் மின்னனு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி வாரியாக மின்னனு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டதையடுத்து அந்த மின்னனு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்து பணி பெல் பொறியாளர்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறவுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், விளவங்கோடு சட்டமன்ற தேர்தல் அலுவலர் சங்கரலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தூர் ராஜன், உதவி தேர்தல் அலுவலர்கள் செல்வி.காளீஸ்வரி, தமிழரசி, கனகராஜ், சுப்பையா, லொரைட்டா, சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சாந்தி, செந்தில்வேல் முருகன், தேர்தல் வட்டாட்சியர் வினோத், துணை வட்டாட்சியர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory