» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வடிவேலு பிரச்சாரம் செய்தாலும் திமுக தோல்வி உறுதி : நடிகா் சிங்கமுத்து
வியாழன் 4, ஏப்ரல் 2024 11:04:39 AM (IST)
திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதால், மக்களவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று திரைப்பட நடிகரும், அதிமுக பேச்சாளருமான சிங்கமுத்து கூறினாா்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பசலியான் நசரேத்துக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மின்கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.
இதன் காரணமாக, அதிமுகவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, திமுகவைவிட அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறுவது உறுதி. நடிகா் வடிவேலு பிரசாரம் செய்தால் திமுக தோல்வியைச் சந்திக்கும் என்பது தெரிந்துதான் அவரை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்றாா். பேட்டியின்போது அதிமுக பேச்சாளா் பி.சி.அன்பழகன் உடனிருந்தாா்.
சந்திரன்Apr 5, 2024 - 09:26:29 AM | Posted IP 172.7*****