» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆவின் பால்பொருட்கள் விநியோகம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

வியாழன் 22, பிப்ரவரி 2024 5:35:05 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பால்பொருட்கள் விநியோகம்  செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் மூலம் விற்பனை மேற்கொள்ளப்படும் ஆவின் பால் பொருட்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஆவின் பால்பொருட்கள் (நெய், தயிர், மோர் பால்பேடா, பாதாம்பவுடர், சாக்லேட், குக்கீஸ், பன்னீர், நறுமணபால், ஐஸ்கிரீம்) விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விபரங்கள் அறிய கன்னியாகுமரி மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக  வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என ஆவின் பொதுமேலாளர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory