» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசேகரம் அரசு மருத்துவமனையினை ஆட்சியர் ஆய்வு

வியாழன் 22, பிப்ரவரி 2024 10:22:22 AM (IST)



குலசேகரம் அரசு மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பல்வேறு துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்

மேலும் இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம், குமரன்குடி கிராம நிர்வாக அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாய விலை கடை, இ-சேவை மையம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையம், மாத்தார் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மேலும்  திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவினை வழங்கியதோடு, வழங்கப்பட்டது. மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.5 கோடி மதிப்பில் புதிதாக் திருவட்டார் பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குலசேகரம் அரசு மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, தொற்றா நோய் பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, மருத்துவமனை அலுவலகம், ஆய்வகம், மருந்தகம், பிரசவத்திற்கு பிந்தைய கவனிப்பு அறை, குழந்தைகள் உள்நோயாளிகள் பகுதி, பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, நாய்கடிக்கு சிசிக்சை அளிக்க போதிய மருந்துகள் இருப்பு உள்ளதா என்பதை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும் பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், கனிவுடனும் நடந்து கொண்டு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து பேராசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கேட்;டறிந்ததோடு, குறுமிளகு பயிரிடுபவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பரிசுகள் வழங்கினார்கள்.

நடைபெற்ற ஆய்வுகளில் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.பிரகலாதன், குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ், மருத்துவ அலுவலர் மரு.மில்லிங் டோனியா, துணை இயக்குநர் ஷீலா ஜாண் (தோட்டக்கலைத்துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கீதா (வேளாண்மை) தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஜெயா ஜாஸ்மின் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory