» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 3:36:02 PM (IST)



அதங்கோட்டில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோட்டில் அமைந்துள்ள தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களின் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், இன்று (12.12.2023) மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தினார்கள்.

அதங்கோட்டாசான் என்றழைக்கப்பட்ட தமிழ்பெரும்புலவர் கி.மு-7-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில், வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு, மருவி தற்போது, விளவங்கோடு என்றழைக்கப்படும் பகுதிக்குட்பட்ட குளப்புறம் கிராமத்திற்கு அருகில், தற்போதைய முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு எனும் கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து, 

நமது மண்ணில் தமிழ் வளர்க்க அரும்பணியாற்றியவர். அப்போதைய பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த கபாடபுரத்தில் உள்ள தமிழ் சங்கத்தில் இணைந்து தமிழ் பணி ஆற்றினார்கள். குறிப்பாக, தமிழ் இலக்கியங்களில் ஒன்றான தொல்காப்பியத்தை வளர்த்து, அன்றைய அரசவையில் தமிழ் கவிஞராகவும் விளங்கியவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்கள். மேலும், அகத்திய முனிவரின் முக்கியமான 12-சீடர்களில் தலைசிறந்த ஒருவராகவும் திகழ்ந்தார்.

மேலும், இவர் பிறந்த ஊரான அதங்கோட்டில் தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும், டிசம்பர் 12-ம் தேதி தமிழக அரசின் சார்பில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றையதினம் (12.12.2023) அதங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜகேசர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அதங்கோட்டாசான் வாரிசு புலவர் கோவிந்தநாதன், மெதுகும்மல் ஊராட்சி மன்ற தலைவர் சசி குமார், வருவாய் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory