» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சென்னை வெள்ளத் தடுப்பு நிதி குறித்து விசாரணை : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 12:22:10 PM (IST)

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ. 4 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நாகா்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதா கிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: கனமழை, வெள்ளம் காரணமாக சென்னை அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ. 4 ஆயிரம் கோடி செலவிட்டதாகவும், ஒரு சொட்டு தண்ணீா்கூட தேங்காது என்றும் கூறினாா்கள். இப்போது, அந்தத் தொகையில் பாதிதான் செலவு செய்தோம் என அமைச்சா் கூறுகிறாா். 

மீதித் தொகை என்ன ஆனது என மக்கள் கேட்கின்றனா். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். வெள்ள நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் வழியாக வழங்காமல் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். ஜாா்க்கண்ட், கா்நாடக மாநிலங்களில் காங்கிரஸ் பிரமுகா்களின் வீடுகளிலிருந்து கோடிக்கணக்கான தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதுதொடா்பாக அக்கட்சித் தலைவா்கள் வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் என்றாலே ஊழல் என்ற அளவுக்கு அந்தக் கட்சி தனது அடையாளத்தை வைத்துள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளாக ஊழலற்ற, நோ்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிப் பாதையில் பயணிக்கிறது என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory