» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.62 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம்!

திங்கள் 11, டிசம்பர் 2023 5:42:44 PM (IST)



திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்டபட்ட பகுதிகளில் ரூ.1.62 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டாத்துறை மற்றும் கண்ணனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறது. 

அதனடிப்படையில் திருவட்டார் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட கைதகுளம் பகுதியில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.50 இலட்சம் மதிப்பில் மதகு சீரமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்ணனூர் மற்றும் காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட முளகுமூடு முதல் பூந்தோப்பு வழியாக பூவன்கோடு செல்லும் சாலையினை சீரமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.53 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் பணிகள் இன்று துவக்கிவைக்கப்பட்டது. துவக்கி வைக்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்..

இந்நிகழ்ச்சிகளில் திருவட்டார் ஊராட்சிஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், ஜாண் பிரைட், ஊராட்சி மன்ற தலைவர்கள் இசையாஸ் (காட்டாத்துறை), ரெஜினி விஜிலா பாய் (கண்ணனூர்), ராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory