» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் நீடிக்கும் சாரல் மழை: திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.

திங்கள் 11, டிசம்பர் 2023 10:52:28 AM (IST)

பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்மட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வகையில், அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதில், பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து 6ஆவது நாளாக நேற்று யும் விநாடிக்கு 611 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. அதேநேரம், சிற்றாறு 1 அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பேச்சிப்பாறை அணைப் பகுதிகள் உள்பட சில இடங்களில் சாரல் பெய்தது. சிற்றாறு அணையிலிருந்து உபரிநீா் நிறுத்தப்பட்டபோதும், பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக அருவியில் குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory