» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி-வாரணாசி இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே தகவல்!

சனி 9, டிசம்பர் 2023 10:12:17 AM (IST)

காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி-வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

வாரணாசியில் வருகிற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இரண்டாவது 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் எண். 06101, சென்னை சென்ட்ரல்- வாரணாசி சிறப்பு ரயில், வருகிற 15ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட உள்ளது. ரயில் எண். 06103, கன்னியாகுமரி-வாரணாசி சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து 20ஆம் தேதி புறப்படும். ரயில் எண் 06105, கோயம்புத்தூர்- வாரணாசி சிறப்பு ரயில் கோயம்புத்தூரில் இருந்து 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்குப் புறப்படும்.

காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சிக்காக தென்னிந்தியாவில் இருந்து வாரணாசிக்கு வரும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory