» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாயரால் கைவிடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை தொண்டு நிறுவன அமைப்பிடம் ஒப்படைப்பு

வெள்ளி 8, டிசம்பர் 2023 4:30:03 PM (IST)



தனியார் மருத்துவமனையில் தாயரால் கைவிடப்பட்ட ஆண் குழந்தையை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், முன்னிலையில் தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட ஆட்சியர் இன்று (08.12.2023) தக்கலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 23.08.2023 அன்று இரவு 10.30 மணியளவில் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையை தாயார் மருத்துவமனையில் விட்டுவிட்டு தலைமறைவு ஆகிவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையின் வாயிலாக மாவட்ட சமூக நல அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தாயாரால் கைவிடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையினை மாவட்ட சமூகநல அலுவலர், நன்னடத்தை அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஆகியோர் குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு சென்று தனியார் மருத்துவமனையிலிருந்து குழந்தையை மீட்டு, மாவட்ட ஆட்சியரிடம் பி.என்.ஸ்ரீதரிடம் ஒப்படைத்தார்கள். 

அதனைத்தொடர்ந்து அக்குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தை சீராக உள்ளது என்பதை உறுதி செய்து அரசு விதிகளுக்கு உட்பட்டு தத்துகொடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாவட்ட சமூக நல அலுவலர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தொண்டு நிறுவன அமைப்பிடம் பாதுகாப்பாக ஒப்படைந்தார்கள். 

இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பொ) பியூலா, நன்னடத்தை அலுவலர் சேவியர், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெரின் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory