» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!

வெள்ளி 1, டிசம்பர் 2023 10:50:50 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு  விழாவினை முன்னிட்டு  தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நூறு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடைபெறுகிறது. 

இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட  தம்பத்துக்கோணம் கிராம பஞ்சாயத்து அரசு நாடு நிலைப்பள்ளி  தம்பத்துக்கோணத்திலும், தோவாளை தாலுகாவிற்குட்பட்ட மாதவாலயம் கிராம பஞ்சாயத்து அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கல்குளம்  தாலுகாவிற்குட்பட்ட திருவிதாங்கோடு கிராம பஞ்சாயத்து திருவாய் மெடி சென்டரிலும், விளவம்கொடு தாலுகா, விளவங்கோடு கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மலையடி அரசு தொடக்கப் பள்ளியிலும் சனிக்கிழமை 02.12.2023 அன்று  நடைபெறவுள்ளது.     

இந்த சிறப்பு சேர்க்கை முகாமில் இது வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்த்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து பதிவு செய்து கொண்டு பயனடையலாம். இந்த முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்திற்கு வந்து பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory